ஹம்ப்பேக் திமிங்கலம் இடம்பெயர்வு
December 26 , 2024
27 days
97
- ஓர் ஆண் இன ஹம்ப்பேக் (திமில் கொண்ட) திமிங்கலம் ஆனது தென் அமெரிக்கா பகுதியிலிருந்து ஆப்பிரிக்கா வரை 13,046 கிலோ மீட்டர் தொலைவிற்கு நீந்தியுள்ளது.
- இது அந்த இனத்தின் மிக நீண்ட இடம்பெயர்வு மற்றும் இரண்டு இனப்பெருக்கக் கால தொலைவுகளைக் கடந்த பயணம் என்ற சாதனையினைப் படைக்கிறது.
- பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களுக்கு இடையே ஒரு வயது முதிர்ந்த ஆண் ஹம்ப்பேக் திமிங்கலம் பயணிப்பது இதுவே முதல் முறையாகும்.
- வழக்கமான ஹம்ப்பேக் திமிங்கலத்தின் இடம்பெயர்வுகள் ஒரு வழியில் சுமார் 4,971 மைல்கள் (8,000 கிலோ மீட்டர்) வரையே பரவியுள்ளன.
Post Views:
97