இந்தோனேசியாவின் படாமில் நடைபெற்ற சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு நடத்திய 2019 ஆம் ஆண்டிற்கான இந்தோனேசியா ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் ஹர்மீத் தேசாய் ஆண்கள் ஒற்றையர் பட்டத்தை வென்றார்.
இவர் தனது சக நாட்டவரான அமல்ராஜ் அந்தோனியை இப்போட்டியில் தோற்கடித்தார்.
இது வெளிநாட்டு மண்ணில் ஹர்மீத் பெற்ற முதல் பட்டம் ஆகும்.
2019 ஆம் ஆண்டு ஜூலையில் ஒடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு, இது அவரது ஒட்டுமொத்த இரண்டாவது சர்வதேச பட்டமாகும்.