TNPSC Thervupettagam

ஹல் திவாஸ் - ஜூன் 30

July 6 , 2024 13 days 160 0
  • பழங்குடித் தலைவர்களான சித்து மற்றும் கனு முர்மு ஆகியோரின் நினைவாக ஆண்டுதோறும் ஹல் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.
  • அவர்கள் 1855 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதியன்று சாஹேப்கஞ்ச் மாவட்டத்தில் (தற்போது ஜார்க்கண்ட்) போக்னாதியில் சந்தால் ஹல்-ஐ (கிளர்ச்சி) வழி நடத்தினர்.
  • இது பெரும்பாலும் "இந்தியச் சுதந்திரத்திற்கான முதல் போர்" என்று குறிப்பிடப் படுகிறது.
  • செழிப்பான மலைகளின் ஓரப் பகுதியில் இந்தக் கிளர்ச்சி நடைபெற்றது.
  • சந்தால் மக்கள் அல்லது சந்தாலிகள் - நவீன கால சந்தால் பர்கானாவில் முதலில் குடியேறிய குடிமக்கள் அல்ல.
  • அவர்கள் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி பிர்பூம் மற்றும் மன்பூம் ஆகிய பகுதிகளிலிருந்து (இன்றைய வங்காளத்தில்) இடம்பெயர்ந்தனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்