இந்தியாவின் மிக வரலாற்றுச் சிறப்புமிக்க 1975 ஆம் ஆண்டு ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெற்றதன் பொன் விழாவுடன் சேர்த்து, இந்திய ஹாக்கி அணியானது அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது.
ஹர்மன்ப்ரீத் மற்றும் சவிதா ஆகியோர் முறையே ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் ஆண்டின் சிறந்த வீரருக்கான பல்பீர் சிங் சீனியர் விருதை வென்றனர்.
1975 ஆம் ஆண்டில் வெற்றி பெற்ற ஹாக்கி அணிக்கு மேஜர் தியான் சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பிரசார் பாரதி நிறுவனத்திற்கு 2024 ஆம் ஆண்டிற்கான போட்டியில் விலைமதிப்பற்றப் பங்களிப்புக்காக ஹாக்கி இந்தியா ஜமன் லால் சர்மா விருது புது டெல்லியில் வழங்கப் பட்டது.