TNPSC Thervupettagam

ஹாக்கி உலகக் கோப்பைப் பாடல் - ஒடியா

November 8 , 2018 2082 days 663 0
  • ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பைக்கான ஊக்குவிப்புப் பாடல் வெளியிடப்பட்டது.
  • இந்தப் பாடல் பாலிவுட் பாடகரான மைக்கா சிங்கால் ஒடியா மொழியில் பாடப்பட்டது.
  • இந்தப் பாடலுக்கு “ஆஸா கரீபா போபால், ஒடிசா நா ஹீபா குளோபல்” என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் புகழ்பெற்ற சம்பல்புரி நடனத்துடன் ஒடிசி நடன அசைவுகள் ஆகிய சிறப்பம்சங்களும் இப்பாடலில் பொதிந்துள்ளன.
  • மேலும் இந்தப் பாடலில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் ஒடிசா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் தலைவரான திலிப் திரிகே ஆகியோரும் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
  • ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ பாடலுக்கு இசையமைப்பதற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை அம்மாநில அரசு தேர்வு செய்துள்ளது. பாலிவுட் கவிஞரான குல்சார் “ஜெய் ஹிந்த், ஜெய் இந்தியா” என்ற பாடலை எழுதியுள்ளார்.
  • ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டியின் துவக்க விழா நவம்பர் 27-ல் நடைபெறவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்