TNPSC Thervupettagam

ஹாங்காங்: நாடு கடத்தல் மசோதா திரும்பப் பெறப்பட்டது

September 5 , 2019 1815 days 572 0
  • சர்ச்சைக்குரிய "நாடு கடத்தல் மசோதாவை” திரும்பப் பெறுவதாக ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் தெரிவித்துள்ளார்.
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரலில் அறிமுகமான இந்த மசோதாவானது கடந்த மூன்று மாதங்களாக நாட்டில் முன் எப்பொழுதும் இல்லாத வகையில் “ஜனநாயக சார்பு” தொடர்பான பேரணிகளைத் தூண்டியது.
  • முன்மொழியப்பட்ட இந்த மசோதாவானது குற்றவியல் தொடர்பான சந்தேக நபர்களை சீனாவின் முக்கிய நிலப்பகுதிக்கு நாடு கடத்த  அனுமதிக்கும்.

 

இதுபற்றி

  • 1842 ஆம் ஆண்டில் முதல் அபின் போரின் முடிவில் சீனாவின் குயிங் வம்சம் ஹாங்காங் தீவை "விட்டுக் கொடுத்த" பின்னர் ஹாங்காங் ஆங்கிலப் பேரரசின் காலனியாக அது மாறியது.
  • சிலபல  கூடுதல் பிரதேசங்களுடன், பிரிட்டன் 1898 ஆம் ஆண்டில் புதிய பிரதேசங்களை 99 ஆண்டுக் குத்தகைக்குப் பெற்றது.
  • 1997 ஆம் ஆண்டில் இந்தப் பகுதி சீனாவுக்கு மாற்றப்பட்டது.
  • ஹாங்காங்கின் சிறப்பு நிர்வாகப் பகுதி சீனாவின் பிரதான நிலப் பகுதியிலிருந்து "ஒரு நாடு, இரண்டு நிர்வாகங்கள்" என்பதின் கீழ் தனித்தனி நிர்வாக மற்றும் பொருளாதார அமைப்புகளைப் பராமரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்