TNPSC Thervupettagam

ஹாங்காங் போராட்டம்

June 21 , 2019 1890 days 610 0
  • ஹாங்காங்கிலிருந்து சீனாவிற்கு நாடு கடத்துவதற்கு அனுமதிக்கும் ஒரு பரிந்துரைக்கப்பட்ட மசோதாவை ஹாங்காங் தலைவரான கேரி லாம் காலவரையறையின்றி ஒத்தி வைத்துள்ளார்.
  • பரிந்துரைக்கப்பட்ட நாடு கடத்துதல் மசோதாவானது ஹாங்காங் நாட்டுடன் நாடு கடத்துதல் ஒப்பந்தம் செய்யப்படாத பகுதிகளுக்கு குற்றவாளிகளை நாடு கடத்துவதற்காக ஹாங்காங் அரசை அனுமதிக்கின்றது.
  • ஹாங்காங்கில் சீனாவின் ஆதிக்கத்தை இந்த மசோதா அதிகரிக்கும் என்று சிவில் சமூக அமைப்புகள் மற்றும் ஹாங்காங்கின் மக்களாட்சிக்கு ஆதரவளிக்கும் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
  • 1997 ஆம் ஆண்டு ஹாங்காங் பிரிட்டிஷ் நாட்டினால் சீனாவிற்கு வழங்கப்பட்ட போது, பிரிட்டிஷ் சட்டத்தின்படி, ஹாங்காங் முழுவதும் துணைநிலை தன்னாட்சிப் பகுதி கொண்ட நகரமாக தொடரும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.
  • சீனா மற்றும் ஹாங்காங் ஆகியவற்றிற்கிடையே தற்பொழுதுள்ள “ஒரு தேசம் இரண்டு நிர்வாகம்” என்ற மாதிரியை இச்சட்டம் சிதைக்கவிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்