பாகிஸ்தான் நாட்டிற்காக சீன நாட்டினால் கட்டமைக்கப்பட்ட முதல் ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2028 ஆம் ஆண்டிற்குள் பாகிஸ்தான் கடற்படை தனது கடற்படையில் சேர்ப்பதற்கு திட்டமிட்டுள்ள இந்த வகையைச் சேர்ந்த எட்டு நீர்மூழ்கிக் கப்பல்களில் இதுவே முதலாவது ஆகும்.
ஹங்கோர்-வகை கப்பல் ஆனது, டீசல் மற்றும் மின்சார எரிபொருளில் இயங்கும் தாக்குதல் வகை நீர்மூழ்கிக் கப்பலான சீனாவின் 039A யுவான் வகுப்பின் ஏற்றுமதிக்காக உருவாக்கப்படும் மாறுபாடாகும்.
இது பிரான்சு நாட்டின் ஸ்கார்பியன் ரகத்தினை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவின் கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்களின் நேரடி இணை வகையாகும்.