TNPSC Thervupettagam

ஹாப்லோப்டிச்சியஸ் சஹ்யாட்ரியென்சிஸ்

June 17 , 2022 766 days 374 0
  • இந்தியாவில் புதிதாகக் கண்டறியப்பட்ட நத்தைக்கு மேற்குத் தொடர்ச்சி மலையின் பெயரிடப் பட்டது
  • மகாராஷ்டிராவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், அறிவியல் உலகிற்கே புதிதான ஒரு மாமிச உண்ணியான நிலவாழ் நத்தை கண்டறியப் பட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள விஷால்காட் வளங்காப்பகத்தில் ஹாப்லோப்டிச்சியஸ் சஹ்யாட்ரியென்சிஸ் இனமானது கண்டறியப்பட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வடக்குப் பகுதிகளிலிருந்து ஹாப்லோப்டிச்சியஸ் சஹ்யாட்ரியென்சிஸ் இனமானது கண்டறியப்பட்டது.
  • இது ஹாப்லோப்டிச்சியஸ் இனத்தின் மூன்றாவது பிரிவாகும்.
  • மற்ற இரண்டு பிரிவுகளான H. அண்டாமணிக்கஸ் மற்றும் H. பிபிஐபரி ஆகியவை 1860 ஆம் ஆண்டுகளில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கண்டறியப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்