ஹாய்சென் சூறாவளியானது ஜப்பானின் தெற்குக் கடற்கரைப் பகுதியில் கரையைக் கடந்தது. கடந்த ஒரு வாரத்திற்குள் அந்நாட்டில் கரையைக் கடக்கும் இரண்டாவது சூறாவளி இதுவாகும்.
இந்தச் சூறாவளியானது நான்காம் வகைச் சூறாவளியாக வகைப்படுத்தப் பட்டு உள்ளது. இதன் பொருள் நன்றாகக் கட்டமைக்கப்பட்ட வீடுகளானது கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்பதைக் குறிக்கின்றது.
குறிப்பிட்ட ஆண்டின் ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு ஏற்படும் முதலாவது சூறாவளி “சூறாவளி எண் 1” எனக் குறிப்பிடப் படுவதன் காரணமாக இது ஜப்பானின் “சூறாவளி எண் 10” ஆகக் குறிப்பிடப் படுகின்றது.
ஹாய்சென் என்ற பெயரானது சீன நாட்டினால் பரிந்துரைக்கப்பட்டதாகும். இதற்கு சீன மொழியில் “கடல் தெய்வம்” என்று பொருள்படும்.
இவை அது ஏற்படும் இடத்தைப் பொறுத்து டைபூன்கள் அல்லது சூறாவளிகள் என்று அழைக்கப் படுகின்றன.