TNPSC Thervupettagam

ஹார்ன்பில் திருவிழா

December 6 , 2018 2054 days 741 0
  • நாகாலாந்தின் கிசாமா என்ற நாகா பாரம்பரிய கிராமத்தில் ஹார்ன்பில் திருவிழா தொடங்கியது. இது “திருவிழாக்களின் திருவிழா” என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஹார்ன்பில் திருவிழாவானது நாகாலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தின் முதலாவது வாரத்தில் அனுசரிக்கப்படுகிறது. இது நாட்டில் கொண்டாடப்படும் உள்நாட்டுத் திருவிழாக்களில் மிகப் பெரிய ஒரு திருவிழாவாகும்.
  • இத்திருவிழாவானது நாகாலாந்தின் மாநிலத் தினமான டிசம்பர் 01 உடன் ஒன்றிப் பொருந்துகிறது.
  • விழிப்புத் தன்மை மற்றும் கம்பீரத் தன்மை போன்ற பண்புகளுக்காக நாகா இன மக்களால் ஆராதிக்கப்படக்கூடிய மற்றும் போற்றப்படக்கூடிய ஹார்ன்பில் பறவைக்கு மரியாதை செலுத்துவதற்காக இத்திருவிழா அனுசரிக்கப்படுகிறது.
  • இத்திருவிழாவானது பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் மரபு ஆகிய இரண்டையும் வெளிப்படுத்துகிறது. மேலும் இது இந்திய கூட்டாட்சி ஒன்றியத்தில் நாகாலாந்தை ஒரு தனித்துவம் வாய்ந்த மாநிலமாக  அடையாளப்படுத்துகிறது.
  • இத்திருவிழாவானது மாநில சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத் துறையினால் ஒருங்கிணைக்கப்படுகிறது. மேலும் இத்திருவிழா மத்திய அரசாங்கத்தினாலும் ஆதரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்