TNPSC Thervupettagam

ஹார்ன்பில் திருவிழா

December 3 , 2017 2547 days 932 0
  • நாகாலாந்து மாநிலத்தின் நாகா பாரம்பரியமுடைய கிசாமா கிராமத்தில் ஹார்ன்பில் திருவிழாவின் 18-வது பதிப்பை இந்திய குடியரசுத் தலைவர் துவங்கி வைத்தார்.
  • இத்திருவிழாவானது 54-வது நாகாலாந்து நிறுவு தினத்தோடு ஒருங்கமையும் வகையில் கொண்டாடப்படுகின்றது.
  • ஹார்ன்பில் திருவிழாவானது நாகாலாந்தில் “திருவிழாக்களின் திருவிழா“ என்றழைக்கப்படுகின்றது.
  • இத்திருவிழா நாகா சமூகத்தின் தனித்தன்மையையும், பூர்வீக பாரம்பரிய செறிவை பாதுகாக்கவும், புத்துணர்வளிக்கவும் கொண்டாடப்படுகின்றது.
  • ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நாகாலாந்தில் ஹார்ன்பில் திருவிழா கொண்டாடப்படுகின்றது. இது இந்தியாவின் மிகப்பெரிய பூர்வீக திருவிழாக்களில் ஒன்றாகும்.
  • கம்பீரமும், எச்சரிக்கை விழிப்புத் தன்மையும் கொண்டதனால், நாகா மக்களால் மதிப்பளித்து போற்றப்படும் ஹார்ன்பில் பறவைக்கு மரியாதை செலுத்தும் விதமாக இத்திருவிழா கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்