TNPSC Thervupettagam

ஹார்முஸ் அமைதி முன்னெடுப்பு

January 13 , 2020 1685 days 529 0
  • அண்மையில் டெஹ்ரானில் நடைபெற்ற ஹார்முஸ் அமைதி முன்னெடுப்பு நிகழ்ச்சியில் இந்தியா கலந்து கொண்டது.
  • இந்த முன்னெடுப்பானது அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே நடைபெறும் பதட்டங்களுக்கு மத்தியில் உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தியை அமைதிப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.  
  • இதில் ஈரானின் முன்னணி வர்த்தகப் பங்காளர் நாடுகளான சீனா, ஓமன், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவையும் கலந்து கொண்டன.
  • ஹார்முஸ் ஜலசந்தியானது உலகின் மிக முக்கியமான போக்குவரத்துப் பகுதியாக விளங்குகின்றது.
  • இந்த ஜலசந்தியானது பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கின்றது.
  • இந்தியாவின் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய் இறக்குமதியும், திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) இறக்குமதியில் பாதியும் இந்த ஜலசந்தி வழியாக நடைபெறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்