அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, மிக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்மூஸ் நீரிணைப் பகுதியை மூடப் போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஹார்மூஸ் நீரிணைப் பகுதியானது எண்ணெய் உற்பத்தி செய்யும் மத்தியக் கிழக்கு நாடுகளையும் ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பால் உள்ள சந்தைகளையும் இணைக்கும் ஒரு முக்கியமான நீர்வழிப் பாதையாகும்.
இந்த நீரிணைப் பகுதியானது தனது குறுகிய பாதையில் 33 கிலோ மீட்டர்கள் வரை பரவியுள்ளது.
இந்த நீரிணைப் பகுதியின் பயணப் பாதையானது இரு திசைகளிலும் 3 கிலோ மீட்டர் அகலத்தை மட்டுமேக் கொண்டுள்ளது.
ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு உலக எண்ணெய் வர்த்தகமானது ஹார்மூஸ் நீரிணைப் பகுதியின் வழியே நடைபெறுகின்றது.
கத்தாரினால் தயாரிக்கப்படும் அனைத்து திரவ இயற்கை வாயுக்களும் (LNG - Liquefied Natural Gas) இந்தப் பாதையின் வழியே அனுப்பப்படுகின்றன.
உலகில் அதிக அளவில் LNG-ஐ உற்பத்தி செய்யும் நாடு கத்தார் ஆகும்.