TNPSC Thervupettagam

ஹார்மூஸ் நீரிணைப் பகுதி

May 2 , 2019 1940 days 551 0
  • அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றம் காரணமாக, மிக முக்கியத்துவம் வாய்ந்த ஹார்மூஸ் நீரிணைப் பகுதியை மூடப் போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • ஹார்மூஸ் நீரிணைப் பகுதியானது எண்ணெய் உற்பத்தி செய்யும் மத்தியக் கிழக்கு நாடுகளையும் ஆசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் அதற்கு அப்பால் உள்ள சந்தைகளையும் இணைக்கும் ஒரு முக்கியமான நீர்வழிப் பாதையாகும்.
  • இந்த நீரிணைப் பகுதியானது தனது குறுகிய பாதையில் 33 கிலோ மீட்டர்கள் வரை பரவியுள்ளது.
  • இந்த நீரிணைப் பகுதியின் பயணப் பாதையானது இரு திசைகளிலும் 3 கிலோ மீட்டர் அகலத்தை மட்டுமேக் கொண்டுள்ளது.
  • ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு உலக எண்ணெய் வர்த்தகமானது ஹார்மூஸ் நீரிணைப் பகுதியின் வழியே நடைபெறுகின்றது.
  • கத்தாரினால் தயாரிக்கப்படும் அனைத்து திரவ இயற்கை வாயுக்களும் (LNG - Liquefied Natural Gas) இந்தப் பாதையின் வழியே அனுப்பப்படுகின்றன.
  • உலகில் அதிக அளவில் LNG-ஐ உற்பத்தி செய்யும் நாடு கத்தார் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்