TNPSC Thervupettagam

ஹாலி வகை வால் நட்சத்திரம் : சேய்மை தூரப் புள்ளி

April 11 , 2024 99 days 223 0
  • 1P ஹாலி என்றழைக்கப்படும் ஹாலியின் வால் நட்சத்திரம் சூரியனிலிருந்து அதன் சேய்மை தூரப் புள்ளியை அடைந்து, மீண்டும் சூரியக் குடும்பத்தை நோக்கி நீண்ட பயணத்தைத் தொடங்கவுள்ளது.
  • உலகில் மிகவும் நன்கு அறியப்பட்ட வால்மீன்களில் ஹாலியின் வால்மீனும் ஒன்றாகும்.
  • இது 75 ஆண்டுகள் முதல் 79 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வருகிறது என்ற நிலையில் இது  மற்ற வால்மீன்களைப் போலவே சூரியனுக்கு அருகில் வரும் போது இரவில் வானில் தோன்றும்.
  • ஹாலியின் வால் நட்சத்திரம் ஆனது தற்போது அதன் சேய்மை தூர நிலையை அடைந்து கொண்டிருப்பதால் அடுத்த 40 ஆண்டுகளுக்கு பூமியில் இருப்பவர்களால் இதனைப் பார்க்க முடியாது.
  • ஹாலியின் வால் நட்சத்திரம் ஜூலை 28, 2061 அன்று மீண்டும் சூரியனுக்கு மிக அருகில் வரக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்