1P ஹாலி என்றழைக்கப்படும் ஹாலியின் வால் நட்சத்திரம் சூரியனிலிருந்து அதன் சேய்மை தூரப் புள்ளியை அடைந்து, மீண்டும் சூரியக் குடும்பத்தை நோக்கி நீண்ட பயணத்தைத் தொடங்கவுள்ளது.
உலகில் மிகவும் நன்கு அறியப்பட்ட வால்மீன்களில் ஹாலியின் வால்மீனும் ஒன்றாகும்.
இது 75 ஆண்டுகள் முதல் 79 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வருகிறது என்ற நிலையில் இது மற்ற வால்மீன்களைப் போலவே சூரியனுக்கு அருகில் வரும் போது இரவில் வானில் தோன்றும்.
ஹாலியின் வால் நட்சத்திரம் ஆனது தற்போது அதன் சேய்மை தூர நிலையை அடைந்து கொண்டிருப்பதால் அடுத்த 40 ஆண்டுகளுக்கு பூமியில் இருப்பவர்களால் இதனைப் பார்க்க முடியாது.
ஹாலியின் வால் நட்சத்திரம் ஜூலை 28, 2061 அன்று மீண்டும் சூரியனுக்கு மிக அருகில் வரக் கூடும்.