ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் ஆடைகள் அணிவதனைத் தடை செய்யும் மசோதாவிற்கு தஜிகிஸ்தான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அவையானது, "அந்நிய ஆடைகள்" மற்றும் ஈத் அல்-பித்ர் மற்றும் ஈத் அல்-ஆதா ஆகிய இரண்டு மிகப்பெரும் முக்கியமான இஸ்லாமிய விடுமுறை நாட்களில் குழந்தைகளின் கொண்டாட்டங்கள் ஆகியவற்றிற்குத் தடை விதித்துள்ளது.
இந்தத் தடையானது, தஜிகிஸ்தான் நாட்டுக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக அந்நாட்டின் செயல்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்டு உள்ளது.