காஸியாபாத்திலுள்ள இந்தியாவின் நீளமான உயர்த்தப்பட்ட சாலையான ஹிண்டன் உயர்த்தப்பட்ட சாலையை உத்திரப்பிரதேச மாநில முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த சாலை உத்திரப்பிரதேச கேட் முதல் ராஜ்நகர் எக்ஸ்டென்சன் வரையுள்ள பகுதிகளை இணைப்பதோடு, டெல்லி மற்றும் காஸியாபாத் இடையே பயணிகள் எளிதாக போக்குவரத்தை மேற்கொள்ள உதவும்.
போக்குவரத்து ரீதியிலான மேம்பாட்டு அடிப்படையில் கட்டப்பட்ட (Transit-oriented Development – TOD) இந்த சாலையானது, பொதுப் போக்குவரத்தை குடியிருப்புப் பகுதிகள் (Residential), வணிகப் பகுதிகள், பொழுதுபோக்குப் பகுதிகள் ஆகியவற்றோடு எளிதில்தொடர்பு கொள்ளும்படி செய்யும் நகர திட்டமிடல் வகையைச் சேர்ந்ததாகும்.