நாட்டின் முதல் மாநிலமாக, மாநில குடிமக்களுக்கு ஹிந்தி மொழியில் இலவச மின்னஞ்சல் முகவரியை இராஜஸ்தான் மாநிலம் அளிக்க உள்ளது.
இதன்படி முதல் மின்னஞ்சல் முகவரி மாநில முதல்வரான திருமதி.வசுந்தரா ராஜே பெயரில் துவங்கப்பட்டுள்ளது.
ஒரு கோடிக்கும் மேலான மக்களின் பயன்பாட்டு பதிவை உடைய இராஜஸ்தானின் “ராஜஸ்தான் டிஜிகிட்“ எனும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மின்னஞ்சல் சேவை துவக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் “Data Mail” சேவை எனும் திட்டத்தின் மூலம் BSNL நிறுவனம் தன் அகலக் கற்றை (பிராட்பேண்ட்) பயன்பாட்டாளர்களுக்கு 8 இந்திய மொழிகளில் மின்னஞ்சல் முகவரி சேவை திட்டத்தை துவங்கியது.
இருப்பினும் BSNL நிறுவனத்தின் இத்தகு திட்டம் போலல்லாமல், இராஜஸ்தான் அரசின் மின்னஞ்சல் முகவரி திட்டமானது அனைத்து இணைய பயன்பாட்டாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.