பின்லாந்தின் தாம்பியரில் நடைபெற்ற IAAF உலக U-20 சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் பங்கேற்று IAAF (International Association of Athletics Federations) உலக சாம்பியன்ஷிப்பில் தடகளம் சார்ந்த தங்கப் பதக்கத்தினை வென்ற இந்தியாவின் முதல் பெண்மணி என்ற வரலாற்றை ஹிமா தாஸ் படைத்துள்ளார்.
அசாமை சேர்ந்த 18 வயதான இவர் 51.46 நொடிகள் என்ற கால அளவில் ரோமானியாவின் ஆன்டிரியா மில்கோஸ் (வெள்ளி) மற்றும் அமெரிக்காவின் டெய்லர் மேன்சன் (வெண்கலம்) ஆகியவர்களை வெளியேற்றி வெற்றி பெற்றுள்ளார்.