ஜப்பான் நாட்டினால் நடத்தப்படும் வருடாந்திர G7 நாடுகளின் உச்சி மாநாடானது ஹிரோஷிமா நகரில் நடைபெற்றது.
G7 ஹிரோஷிமா தலைவர்களின் அறிவிப்பில் ஹிரோஷிமா செயற்கை நுண்ணறிவுச் செயல்முறையை (HAP) தொடங்கப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டது.
இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பப் பயன்பாட்டினை நன்கு ஒழுங்குமுறைப் படுத்தச் செய்வதற்கான பல்வேறு முற்போக்கு வழிமுறைகளைத் தீர்மானிப்பதற்கான ஒரு முன்னெடுப்பாகும்.
நம்பகமான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தினைப் பற்றிய பொதுவான நோக்கம் மற்றும் இலக்கை அடைவதற்கு, உள்ளார்ந்த செயற்கை நுண்ணறிவு ஆளுமை மற்றும் இயங்குந்தன்மை பற்றியப் பல சர்வதேச விவாதங்களை முன்னெடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.