இரண்டாம் உலகப் போரின் போது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 ஆம் தேதியன்று, எனோலா கே என்ற ஒரு அமெரிக்க விமானம் ஜப்பானின் ஹிரோஷிமா நகரின் மீது "லிட்டில் பாய்" என்ற அணுகுண்டை வீசியது.
அன்றிலிருந்து இன்று வரை எழுபத்தேழு ஆண்டுகள் கடந்து விட்டன.
மேலும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 06 ஆம் தேதியை உலக நாடுகள் புனித நினைவு நாள் மற்றும் கவன ஈர்ப்பு நாளாக அனுசரித்து வருகிறது.
இந்த நாளானது அணு ஆயுதப் போரின் பேரழிவு மிக்கப் பெரும் தாக்கத்தினை நினைவு கூருகிறது.
அமைதி மற்றும் ஆயுதக் குறைப்பு ஆகிய நிலையை அடைவதில் உலக நாடுகளின் ஒற்றுமைக்கான அவசர அழைப்பினை இது விடுக்கிறது.