TNPSC Thervupettagam

ஹீலியம் வாயு நிறைந்த வெப்பமிகு சார் நிலை குறுநட்சத்திரங்கள்

March 12 , 2024 129 days 155 0
  • ஒரு பெரிய சர்வதேச வானியலாளர்கள் குழுவானது, இன்று வரை அறியப்பட்ட மிகச் சிறிய நட்சத்திரத்தைக் கண்டறிந்துள்ளது.
  • மேலும், கூடுதலாக அது மற்றொரு சற்றே பெரிய நட்சத்திரத்துடன் இணையாக இருப்பதாகக் கண்டறியப் பட்டது.
  • இவை அவற்றின் மையக்கருவில் ஹீலிய வாயுவினை எரிக்கின்றன என்பதோடு,  இவை பொதுவாக அண்ட நட்சத்திரக் குழுக்களில் காணப்படுகின்றன.
  • இந்த நட்சத்திரம் ஆனது J0526 எனப்படும் இரட்டை மண்டல அமைப்பின் ஒரு பகுதியாகும் என்ற நிலையில் இது பூமியிலிருந்து சுமார் 2,760 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
  • இதுவரை கண்டறியப்படாத இந்த இரண்டு நட்சத்திரங்களுக்கு J0526A பெரிய வெண் குறுநட்சத்திரம் மற்றும் J0526B வெப்பமிகு சார்நிலைக் குறு நட்சத்திரம் என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • சிறிய நட்சத்திரம் ஆனது பூமியை விட தோராயமாக ஏழு மடங்கு பெரியது, அதாவது சனிக்கோளை விட சிறியது.
  • இது தோராயமாக 2,226 டிகிரி செல்சியஸ் மேற்பரப்பு வெப்பநிலையைக் கொண்டு உள்ளது.
  • இது தோராயமாக 20 நிமிடங்களுக்கு ஒரு முறையும் பெரிய நட்சத்திரத்தைச் சுற்றி வருகிறது.
  • அதாவது இது சுமார் 72 ஆண்டுகளை ஒரு புவி நாளாக மாற்றுகிறது.
  • TMTS J0526B நடச்சத்திரத்திற்கு முன்னதாக, பூமியிலிருந்து 600 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள செந்நிற நட்சத்திரமான EBLM J0555-57Ab என்பது இதுவரை கண்டறியப்பட்ட மிகச்சிறிய நட்சத்திரங்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்