நாசானது பூமிக்கு அருகில் விண்வெளிக் காலநிலையை இயக்கக் கூடிய சூரியன் மற்றும் சூரியக் குடும்பத்தை ஆய்வு செய்வதற்காக வேண்டி 2 ஹீலியோ இயற்பியல் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இவை ஒன்றிணைந்து, பின்வருவனவற்றிற்கு நாசாவின் பங்களிப்பானது சூரியன் மற்றும் பூமி ஆகியவை ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட அமைப்பு என்பதைப் புரிந்து கொள்ள உதவ இருக்கின்றது.
வலுவான புற ஊதா உயர் உற்பத்தி ஒளிக்கதிர் ஆய்வுத் தொலைநோக்கி எப்சிலோன் திட்டம் (Extreme Ultraviolet High - Throughput Spectroscopic Telescope Epsilon Mission - EUVSAT)
செறிவு மின்னோட்ட சீமன் உருவப் பட ஆய்வு (Electrojet Zeeman Imaging Explorer - EZIE)
EUVST
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமானது இதரப் பங்காளர்களுடன் இணைந்து EUVST எப்சிலோன் திட்டத்தை (சூரிய ஒளி சி - EUVST திட்டம்) முன்னெடுக்கின்றது.
இது 2026 ஆம் ஆண்டில் செலுத்தப்பட வேண்டி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு சூரிய ஒளித் தொலைநோக்கியாகும்.
EZIE
இது 2024 ஆம் ஆண்டில் செலுத்தப்பட உள்ளது.
இது அரோராவை பூமியின் காந்த மண்டலத்துடன் இணைக்கும் பூமியின் வளிமண்டலத்தில் உள்ள மின்னோட்டங்களைப் பற்றி ஆய்வு செய்யவுள்ளது.
காந்த மண்டலமானது சூரிய ஒளிச் செயல்பாடுகள் மற்றும் இதரக் கூறுகளுக்கு எதிர்வினையாற்றுகின்றது.