TNPSC Thervupettagam

ஹுக்கா விடுதிகளைத் தடை செய்த 3வது மாநிலம் பஞ்சாப்

November 26 , 2018 2064 days 605 0
  • மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தையடுத்து ஹுக்கா விடுதி அல்லது ஹுக்கா விற்பனை செய்யும் இடங்களைத் தடை செய்த மூன்றாவது மாநிலமாக பஞ்சாப் உருவெடுத்துள்ளது.
  • இந்த தடையானது பஞ்சாப் சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்த பின்னர் அறிவிக்கப்பட்டது.
  • பல்வேறு வடிவங்களில் புகையிலை பயன்படுத்தப்படுவதைத் தடை செய்யவும் புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களைத் தடுப்பதும் இந்த சட்டத்தின் குறிக்கோள்களாகும்.

குறிப்பு

  • பஞ்சாப் மாநில சட்டமன்றமானது சிகரெட் மற்றும் மற்ற புகையிலை தயாரிப்புகள் - பஞ்சாப் திருத்த மசோதா 2018 (விளம்பரத்திற்கான தடை, விற்பனை மற்றும் வணிகத்திற்கான ஒழுங்குமுறை, உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம்) என்ற மசோதாவை இவ்வருடத்தின் மார்ச் மாதத்தில் நிறைவேற்றியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்