ஹுருண் நிறுவனத்தின் உலகின் 500 முன்னணி நிறுவனங்களின் தரவரிசை
December 26 , 2022 698 days 320 0
உலகின் மிக மதிப்புமிக்க 20 நிறுவனங்களை இந்தியா கொண்டுள்ளது.
உலகின் தலைசிறந்த 500 நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கடந்த ஆண்டு, இந்தப் பட்டியலில் எட்டு நிறுவனங்கள் இடம் பெற்றதன் மூலம் இதில் இந்தியா 9வது இடத்தைப் பெற்றது.
இந்தத் தரவரிசையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், சீனா 35 நிறுவனங்களுடன் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் (28) மற்றும் இங்கிலாந்து (21) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
ஹுருண் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியல் ஆனது, உலகின் மிகவும் மதிப்புமிக்க 500 அரசு சாராத நிறுவனங்களின் தொகுப்பாகும்.
இந்திய அளவிலான தரவரிசையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது முதலிடத்தைப் பெற்றுள்ளதோடு, இது உலகளவில் 34வது இடத்தையும் பெற்றுள்ளது.
அதைத் தொடர்ந்து டாடா ஆலோசனை சேவை வழங்கீட்டு நிறுவனம் மற்றும் HDFC வங்கி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
உலகளவில், உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் என்ற இடத்தை ஆப்பிள் நிறுவனம் தக்க வைத்துக் கொண்டது.
ஹுருண் நிறுவனத்தின் உலகின் 500 முன்னணி நிறுவனங்களின் தரவரிசையில் இடம் பெற்றுள்ள 50 சதவீத நிறுவனங்கள் அல்லது 250 நிறுவனங்கள் இந்தியாவில் வணிகம் மேற்கொள்கின்றன.