TNPSC Thervupettagam

ஹுருண் நிறுவனத்தின் உலகின் 500 முன்னணி நிறுவனங்களின் தரவரிசை

December 26 , 2022 570 days 262 0
  • உலகின் மிக மதிப்புமிக்க 20 நிறுவனங்களை இந்தியா கொண்டுள்ளது.
  • உலகின் தலைசிறந்த 500 நிறுவனங்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • கடந்த ஆண்டு, இந்தப் பட்டியலில் எட்டு நிறுவனங்கள் இடம் பெற்றதன் மூலம் இதில் இந்தியா 9வது இடத்தைப் பெற்றது.
  • இந்தத் தரவரிசையில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும், சீனா 35 நிறுவனங்களுடன் இரண்டாவது இடத்திலும், ஜப்பான் (28) மற்றும் இங்கிலாந்து (21) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
  • ஹுருண் ஆராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியல் ஆனது, உலகின் மிகவும் மதிப்புமிக்க 500 அரசு சாராத நிறுவனங்களின் தொகுப்பாகும்.
  • இந்திய அளவிலான தரவரிசையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமானது முதலிடத்தைப் பெற்றுள்ளதோடு, இது உலகளவில் 34வது இடத்தையும் பெற்றுள்ளது.
  • அதைத் தொடர்ந்து டாடா ஆலோசனை சேவை வழங்கீட்டு நிறுவனம் மற்றும் HDFC வங்கி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • உலகளவில், உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனம் என்ற இடத்தை ஆப்பிள் நிறுவனம் தக்க வைத்துக் கொண்டது.
  • ஹுருண் நிறுவனத்தின் உலகின் 500 முன்னணி நிறுவனங்களின் தரவரிசையில் இடம் பெற்றுள்ள 50 சதவீத நிறுவனங்கள் அல்லது 250 நிறுவனங்கள் இந்தியாவில் வணிகம் மேற்கொள்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்