ஷாங்காய் நகரில் உள்ள ஹுருன் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, மும்பை நகரானது ஆசியாவின் செல்வந்தர்களின் தலைநகரான பெய்ஜிங்கை பின்னுக்குத் தள்ளியது.
மும்பைமாநகரானது சுமார் 92 செல்வந்தர்களுடன், நியூயார்க் (119) மற்றும் இலண்டன் (97) ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக ஆசியாவின் மூன்றாவது செல்வந்தர்களின் தலைநகர் என்ற நிலையைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம்ஆனது 2023 ஆம் ஆண்டில் 7.5% வளர்ச்சி அடைந்தது.
இதன் மூலம் 94 செல்வந்தர்கள் சேர்க்கப்பட்டதுடன், 2013 ஆம் ஆண்டு முதல் அதிக செல்வந்தர்கள் கொண்ட நகராக மாறியுள்ளது.
814 செல்வந்தர்களுடன் சீனா இந்த அறிக்கையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஆனால் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, 155 செல்வந்தர்களுடன், சீனா அதிஉயர் பணக்காரர்களின் எண்ணிக்கையில் சரிவைச் சந்தித்துள்ளது.
இந்தப் பட்டியலில் 73 நாடுகளைச் சேர்ந்த 3,279 செல்வந்தர்கள் இடம் பெற்றதோடு, உலகளாவிய செல்வப் பரவலை இது எடுத்துக்காட்டுகிறது.