ஹுருன் இந்தியா - மிகவும் மதிப்புமிக்க குடும்ப வணிகங்கள் 2024
August 31 , 2024 84 days 91 0
முகேஷ் அம்பானி தலைமையிலான அம்பானி குழுமம் (குடும்பம்) ஆனது, 25,75,100 கோடி ரூபாய் மதிப்புடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அதைத் தொடர்ந்து நிராஜ் பஜாஜ் தலைமையிலான பஜாஜ் குழுமம் (ரூ. 7,12,700 கோடி) மற்றும் குமார மங்கலம் பிர்லா குழுமம் (ரூ. 5,38,500 கோடி) ஆகியவை இடம் பெற்றுள்ளன.
இருப்பினும், 15,44,500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட அதானி தலைமையிலான எரிசக்தி சார்ந்த குழுமம் ஆனது, முதல் தலைமுறை சார்ந்த குடும்ப வணிகம் என்பதால் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.
மற்ற முதல் தலைமுறை சார்ந்த குடும்பங்களின் பட்டியலில், சைரஸ் பூனாவாலா தலைமையிலான பூனாவாலா குழுமம் 2,37,100 கோடி ரூபாய் மதிப்புடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது.
அதைத் தொடர்ந்து, திவி குடும்பம் மற்றும் ரெட்டி குடும்பம் ஆகியவை தலா 91,200 கோடி மற்றும் 88,800 கோடி ரூபாய் மதிப்புடன் இடம் பெற்றுள்ளன.