TNPSC Thervupettagam
December 3 , 2020 1458 days 623 0
  • இது சீனாவின் முதலாவது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அணு உலை ஆகும்.
  • இது புஜியன் மாகாணத்தில் அமைந்துள்ள ஃபுகிங் அணு மின் நிலையத்தின் பிரிவு 5 என்பதில் நிறுவப் பட்டுள்ளது.
  • இதனால் ஆண்டுக்கு 10 பில்லியன் கிலோ வாட் மணி நேர அளவிலான (10 billion kilo watt hour) மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
  • ஹுவாலாங் ஒன் அணு உலையின் ஆயுட்காலம் 60 ஆண்டுகள் ஆகும்.
  • சீனாவில் 47 அணு மின் நிலையங்கள் உள்ளன.
  • அவை மொத்தமாக 48.75 மில்லியன் கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
  • இதன் மூலம், அமெரிக்கா மற்றும் பிரான்சிற்கு அடுத்தபடியாக சீனாவானது உலகின் மூன்றாவது மிக அதிகமான அணுசக்தியைக் கொண்டுள்ளது.
  • பாகிஸ்தானிற்கு ஐந்து ஹுவாலாங் ஒன் அணு உலைகளை அளிக்க சீனா திட்டமிட்டுள்ளது.
  • அதில் நான்கு உலைகள் கராச்சி அணுமின் நிலையத்திலும், ஒன்று சாஷ்மா அணுமின் நிலையத்திலும் கட்டமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்