தென்கொரிய நாட்டின் மகிழுந்து வாகன உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், 10 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது.
அது இந்த நிறுவனம் சமீபத்தில் அறிமுகப் படுத்திய ஹூண்டாய் அல்கசார் (Hyundai Alcazar) எனும் மகிழுந்தாகும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த காரின் மீது கையெழுத்திட்டார்.
சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் இருங்காட்டுக்கோட்டை என்னுமிடத்தில் அமைந்துள்ள ஹூண்டாய் ஆலையானது 2021 ஆம் ஆண்டில் தனது 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இது 1996 ஆம் ஆண்டில் கருணாநிதி அவர்களின் ஆட்சியின் போது தொடங்கப் பட்டது.