TNPSC Thervupettagam

ஹென்டர்சன் கோட்பாடு குறித்து உச்ச நீதிமன்றம்

December 21 , 2024 5 days 63 0
  • சமீபத்திய வழக்கில், உச்ச நீதிமன்றம் ஆனது ஹென்டர்சன் கோட்பாட்டை விளக்கி உள்ளது.
  • இது உரிமையியல் நடைமுறைச் சட்டத்தின் (CPC) 11வது பிரிவின் விளக்கத்தின் IVவது விளக்கத்தில் குறிப்பிடப்பட்ட மிகவும் ஆக்கப்பூர்வமான Res-judicata என்ற இந்தியக் கோட்பாட்டின் காரணமாக தோன்றியதாகும்.
  • இது 1843 ஆம் ஆண்டில் நடைபெற்ற சேன்சரி நீதிமன்றம் மற்றும் ஹென்டர்சன் vs ஹென்டர்சன் இடையிலான வழக்கில் முன்மொழியப்பட்டது.
  • ஒரே விவகாரத்திலிருந்து எழும் அனைத்துப் பிரச்சினைகளும் ஒரே வழக்கில் தீர்க்கப் பட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
  • இது மீண்டும் மீண்டும் உருவாகின்ற மற்றும் அலைக்கழிக்கும் சட்ட சவால்களைத் தடுக்கும்.
  • தகுதி வாய்ந்த அதிகார வரம்பு கொண்ட நீதிமன்றத்தினால் ஒரு விவகாரம் குறித்து தீர்ப்பளிக்கப்பட்டால், இவ்வழக்குதாரர்கள் முந்தைய வழக்காடல் நடவடிக்கைகளில் எழுப்பப் பட்ட சில பிரச்சினைகளை மீண்டும் வழக்காடுவதற்கு அலட்சியம் அல்லது கவனக் குறைவு என எதையும் பொருட்படுத்தாமல் தடைசெய்யப்படும் என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
  • Res Judicata என்பது "ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட ஒரு விவகாரம்" என்று பொருள் படுகிறது.
  • இது கீழ்க்காணும் சூழல்களில் பொருந்தும்:
    • முன்னர் முடிவு செய்யப்பட்ட ஒரு விவகாரத்துடன் நேரடியாகவோ குறிப்பிட்ட வகையிலோ பிரச்சினையாக இருந்தால்,
    • வழக்கு தாரர்கள் ஒரே மாதிரியாகவோ அல்லது அதே கருத்துருவின் கீழ் உரிமை கோருவதாகவோ இருந்தால்,
    • முந்தைய ஒரு முடிவினை மேற்கொண்ட நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்க தகுதியானதாக இருந்தால் இது பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்