TNPSC Thervupettagam

ஹென்லி கடவுச் சீட்டுக் குறியீடு

July 6 , 2019 1875 days 622 0
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட 2019 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச் சீட்டுக் குறியீட்டில் 58 பயணப் புள்ளிகளுடன் 86 வது இடத்தில் இந்தியக் கடவுச் சீட்டு தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
  • இந்தப் புள்ளிகள் இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே வழங்கப்படும் நுழைவு இசைவு இல்லாமல் 58 நாடுகளுக்குச் செல்ல முடியும் என்று கூறுகின்றது.
  • இந்தப் பட்டியலில் 189 பயணப் புள்ளிகளுடன் ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன.
  • இந்தத் தரவரிசையானது சர்வதேச விமானப் போக்குவரத்துக் கூட்டமைப்பிலிருந்து (IATA - International Air Transport Association) பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஹென்லி கடவுச் சீட்டுக் குறியீடானது, தங்களது குடிமக்களுக்கான பயணச் சுதந்திரத்தின்படி நாடுகளை சர்வதேச அளவில் தரவரிசைப் படுத்துவதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்