சர்வதேச விமானப் போக்குவரத்துச் சங்கத்திலிருந்துப் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், 2020 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டுக் குறியீடானது ஹென்லி & பார்ட்னர்ஸ் என்னும் அமைப்பால் வெளியிடப்பட்டது.
இந்தியக் கடவுச்சீட்டானது உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டுப் பட்டியலில் 84வது இடத்தில் உள்ளது.
2019 ஆம் ஆண்டில் 82வது இடத்தைப் பெற்றிருந்த இந்தியா தற்போது 2 இடங்கள் சரிவை எதிர்கொண்டுள்ளது.
58 நாடுகளுக்கு நுழைவு இசைவு அற்ற (விசா அல்லாத) அணுகலை இந்தியா வழங்குகின்றது.
இந்தப் பட்டியலில் ஜப்பான் நாட்டின் கடவுச்சீட்டு முதலிடத்திலும் ஆப்கானிஸ்தானின் கடவுச்சீட்டானது கடைசி இடத்திலும் உள்ளது.