சிங்கப்பூர் நாட்டின் கடவுச் சீட்டானது, அதன் குடிமக்கள் 195 நாடுகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இன்றி பயணம் மேற்கொள்ளலாம் என்பதால் அது மீண்டும் உலகின் மிக சக்தி வாய்ந்த கடவுச் சீட்டு என்ற அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது.
பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் சுமார் 192 நாடுகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இன்றி பயணம் மேற்கொள்ள தங்கள் பெரும் குடி மக்களுக்கு அனுமதி அளித்து இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளன.
அமெரிக்கா தனது குடிமக்களுக்கு 186 நாடுகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இன்றி பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கி 8வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா அதன் குடிமக்களுக்கு சுமார் 58 நாடுகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இன்றி பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கி 83வது இடத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், யேமன், சோமாலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் கடவுச் சீட்டுகள் உலகின் மிகக் குறைந்த சக்தி வாய்ந்தவையாக உள்ளன.