பிரான்ஸ் நாட்டின் கடவுச் சீட்டு ஆனது 194 நாடுகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இன்றி பயணிப்பதற்கான அணுகலை வழங்குவதால் இந்தப் பட்டியலில் பிரான்ஸ் முதல் இடத்தினைப் பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டில் 84வது இடத்திலிருந்த இந்தியா ஒரு இடத்தை தவற விட்டு, 85வது இடத்திற்கு நகர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் 60 நாடுகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் பயணிக்க முடியும் என்ற நிலையில் இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையானது 62 ஆக அதிகரித்துள்ளது.
194 உலகளாவிய நாடுகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் பயணிக்க அனுமதிப்பதால் ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் பிரான்சுடன் முன்னணி இடங்களில் இடம் பெற்றுள்ளன.
பாகிஸ்தான் கடந்த ஆண்டைப் போலவே 106வது இடத்தில் தனது நிலையைத் தக்க வைத்து கொண்டுள்ள அதே நேரத்தில் வங்காள தேசம் 101வது இடத்திலிருந்து 102வது இடத்திற்குச் சரிந்துள்ளது.