உலகளாவிய கடவுச்சீட்டு குறியீட்டில் இந்தியாவின் தரவரிசையானது ஐந்து புள்ளிகள் குறைந்து இந்த ஆண்டு 85 ஆக உள்ளது.
ஒரு இந்தியக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர் 57 இடங்களுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் பயணிக்கலாம்.
இந்தக் குறியீட்டில் சிங்கப்பூர் நாடு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.
இந்தக் குறியீட்டில் 199 வெவ்வேறு கடவுச் சீட்டுகள் மற்றும் 227 வெவ்வேறு பயண இடங்கள் அடங்கும்.
2025 ஆம் ஆண்டிற்கான இந்தக் குறியீட்டின் படி, பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தின் தரவரிசை முறையே 103வது (2024 ஆம் ஆண்டில் 101வது) மற்றும் 100வது (2024 ஆம் ஆண்டில் 97வது) இடத்தில் இருந்தது.
2024 ஆம் ஆண்டிற்கான ஹென்லே கடவுச்சீட்டுக் குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை உலகளவில் 80வது இடத்தில் இருந்தது.
இந்த ஆண்டு ஜப்பானின் தரவரிசை 2வது இடத்தில் உள்ளதோடு இது 2018-2023 ஆம் ஆண்டு வரை அது முதலிடத்தில் இருந்தது.
2024 ஆம் ஆண்டில், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரண்டு நாடுகளும் இதில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டன.