இமாச்சலப் பிரதேசத்தின் அமைச்சரவை, இலவச ஹெலி ஆம்புலன்ஸ் சேவைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இச்சேவையானது, மனாலியிலுள்ள லேடி வில்லிங்டன் மருத்துவமனையின் உதவியோடு சுவிட்சர்லாந்து மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த முடிவு குறிப்பாக மாநிலத்தின் தொலைதூரப்பகுதிகள் மற்றும் பழங்குடியினப்பகுதிகளிலுள்ள நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கும், சுகாதார போக்குவரத்து சேவைகளை பலப்படுத்துவதற்குமான ஒரு நடவடிக்கையாகும்.
சுகாதார மாற்றத்திற்கான திட்டம் - டாடா டிஜிட்டல் நரம்பியல் மைய தளத்தை (Digital Nerves Centre Platform - DiNC) குளு மாவட்டத்தில் அமைப்பதற்கும் முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது.
சேவை நோக்கில் உருவாக்கப்பட்ட டாடா டிஜிட்டல் நரம்பியல் மைய தளம், நோயாளிகள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோர்களுக்கு புவியியல் தடைகளற்ற தொடர்பிற்கு வழிவகை செய்கிறது.