தேயிலை கொசுப் பூச்சி (Helopeltis Theivora) அல்லது நாவாய்ப் பூச்சி தென்னிந்தியாவில் உள்ள தாழ்மட்ட மற்றும் உயர்மட்ட நிலங்களில் அமைந்தத் தோட்டப் பயிர்நிலங்களில் வேகமாக பரவி தேயிலை உற்பத்தியைப் பாதித்து வருகிறது.
இது பெரும்பாலான தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் தேயிலைச் சாற்றினை உறிஞ்சி அவற்றை அழிக்கும் ஒரு முக்கியப் பூச்சி வகையாகும்.
தேயிலை கொசுப் பூச்சியின் இளம் பூச்சிகள் /லார்வாக்கள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் மென்மையான இலைகள், மொட்டுகள் மற்றும் இளம் தளிர்கள் ஆகியவற்றிலிருந்துச் சாற்றை உறிஞ்சுவதால், அதிகப் பயிர் இழப்பு ஏற்படுகிறது.
6.37 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்புடன், உலகிலேயே அதிகளவிலான தேயிலை பயிரிடும் நிலப்பரவலைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
வட இந்தியாவில் தேயிலைப் பயிரிடல் பரப்பளவு என்பது 5.36 லட்சம் ஹெக்டேர் என்ற நிலையில் தென் இந்தியாவில் இது 1.01 லட்சம் ஹெக்டேர் பரப்பளவாகும்.