TNPSC Thervupettagam

ஹெல்மண்ட் நதிநீர் சச்சரவு

June 7 , 2023 538 days 288 0
  • ஹெல்மண்ட் நதி தொடர்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே சச்சரவு உள்ளது.
  • இது அந்த இரு நாடுகளுக்கும் தேவையான குடிநீர், நீர்ப்பாசனம் மற்றும் மீன் பிடித்தல் ஆகியவற்றுக்கு ஒரு முக்கியமான ஆதாரமாக உள்ளது.
  • 1973 ஆம் ஆண்டில் இந்த இரு நாடுகளும் நீர் வளங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • ஆனால் அந்த ஒப்பந்தம் இதுவரையில் ஏற்றுக் கொள்ளப் படாததால் ஹெல்மண்டின் நீர்ப் பயன்பாட்டு நிலை ஒரு சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.
  • 1973 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி ஆப்கானிஸ்தான் ஈரான் நாட்டிற்கு வருடத்திற்கு வினாடிக்கு 22 கன மீட்டர் வீதம் கூடுதலாக வினாடிக்கு நான்கு கன மீட்டர் தண்ணீரை வழங்க வேண்டும்.
  • ஹெல்மண்ட் நதியானது ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைத்தொடரில் தோன்றி ஆப்கானிஸ்தான் முழுவதும் பாய்கிறது.
  • இது இரு நாடுகளுக்கும் இடையே எல்லையை உருவாக்கும் ஷெலே சரக் நதியாகவும், மேற்கு நோக்கி ஈரானுக்குள் பாயும் சிஸ்தான் நதியாகவும் பிரிகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்