TNPSC Thervupettagam

ஹேக் உடன்படிக்கையின் 70வது ஆண்டு நிறைவு

May 15 , 2024 65 days 140 0
  • ஆயுத மோதலில் பண்பாடு சார்ந்த சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான ஹேக் உடன்படிக்கையின் 70வது ஆண்டு நிறைவை யுனெஸ்கோ அமைப்பு நினைவு கூருகிறது.
  • இது 1954 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதியன்று உருவாக்கப்பட்டது.
  • இது 1999 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதியன்று கையொப்பத்திற்காக முன் வைக்கப் பட்ட அதன் இரண்டாவது நெறிமுறையின் 25 வது ஆண்டு நிறைவு விழாவாகும்.
  • அமைதிக் காலங்களிலும், ஆயுத மோதலின் போதும் கலாச்சாரம் சார்ந்த பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்காக வேண்டி பிரத்தியேகமாக அர்ப்பணிக்கப்பட்ட முதல் மற்றும் மிக விரிவான பலதரப்பு ஒப்பந்தம் இதுவாகும்.
  • இதைத் தொடர்ந்து, முன்னதாக சர்வதேச ப்ளூ ஷீல்டு குழு என அறியப்பட்ட ப்ளூ ஷீல்டு (நீலக் கேடயம்) அமைப்பு 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • ப்ளூ ஷீல்டு வலையமைப்பு ஆனது, கலாச்சாரம் சார்ந்த அமைப்புகளின் பாதுகாப்பில் செஞ்சிலுவைச் சங்கத்திற்கு இணையானதாகக் குறிப்பிடப்படுகிறது.
  • 1954 ஆம் ஆண்டு ஹேக் உடன்படிக்கையில் இந்தியாவும் அங்கம் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்