அமெரிக்கப் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) ஆனது, அதானி குழும நிறுவனருக்கு சட்ட ஆவணங்களை வழங்குவதற்கு என இந்திய அதிகாரிகளிடமிருந்து உதவி கோரியுள்ளது.
இந்த உரிமைக் கோரிக்கை வழக்கை முறையாக அறிவிக்க அமெரிக்கக் குழு ஹேக் சேவை உடன்படிக்கையினை நாடியுள்ளது.
ஹேக் சேவை உடன்படிக்கை ஆனது, 'உரிமையியல் அல்லது வணிக விவகாரங்களில் நீதித்துறை மற்றும் நீதிக்கு அப்பாற்பட்ட ஆவணங்ககள் தொடர்பான வெளிநாட்டுச் சேவைக்கான உடன்படிக்கை' என்று முறையாக அறியப்படுகிறது.
பன்னாட்டு நாடுகளுக்கு இடையே சட்ட ஆவணங்களை வழங்கும் செயல்முறையை தரப்படுத்துவதற்காக இது நிறுவப்பட்டது.
சுமார் 68 கையொப்பதார நாடுகளுடன், இந்த உடன்படிக்கையானது சர்வதேச சட்டச் சேவைக்கான மிகவும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட முறையாக உள்ளது.