October 21 , 2024
33 days
131
- நூறு மில்லியன் டன் நைட்ரஜன் தற்போது வளிமண்டலத்தில் இருந்து அகற்றப்பட்டு, ஹேபர்-போஷ் செயல்முறை மூலம் உரமாக மாற்றப்பட்டுள்ளது.
- இது 165 மில்லியன் டன்கள் எதிர்வினை கொண்ட நைட்ரஜனை மண்ணில் சேர்க்கிறது.
- உயிரியல் செயல்முறைகள் ஆனது ஒவ்வோர் ஆண்டும் 100-140 மில்லியன் டன்கள் வரையிலான எதிர்வினை நைட்ரஜனை மண்ணில் நிரப்புகின்றன.
- BASF நிறுவனத்தின் கார்ல் போஷ் என்பவரின் பொறியியல் ஆனது, ஹேபரின் அமைப்பை, உரத்தை உற்பத்தி செய்வதற்கான ஒரு தொழில்துறை செயல்முறையாக மாற்றியது.
- ஹேபர் அமைப்பு உருவாக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, BASF நிறுவனம் அதன் முதல் அம்மோனியா தொழிற்சாலையை 1913 ஆம் ஆண்டில் திறந்தது.
- ஹேபர்-போஷ் செயல்முறையானது தொழில்துறைகள் மிகவும் மலிவான செயற்கை உரங்களை உருவாக்க வழிவகுத்தது.
- 20 ஆம் நூற்றாண்டில் உலகின் உணவு விநியோகத்தின் ஏழு மடங்கு உயர்விற்கு இது ஒரு முக்கிய அங்கமாக இருந்தது.
- ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, சுமார் 19 ஆண்டுகளாக இருந்த ஓர் இந்தியரின் சராசரி ஆயுட்காலம் இன்று 67+ ஆண்டுகள் ஆக மாறியுள்ளது.
Post Views:
131