உலகின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் பயணிகள் இரயிலை ஜெர்மனி வெளியிட்டுள்ளது. ‘ஐலிண்ட்’ (iLint) என்றழைக்கப்படும் இந்த இரயிலானது பூஜ்ய உமிழ்வுடையதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவையாக உள்ளது.
இந்த இரயில் தொழில் நுட்பமானது மின்மயமாக்கப்பட்ட இரயில் பாதைகளில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், சத்தமில்லாததாகவும் டீசலுக்கு மாற்றாகவும் உள்ளது.
இந்த ஹைட்ரஜன் இரயிலானது பிரான்ஸின் TGV தயாரிப்பாளரான அல்ஸ்டாம் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது.
ஹைட்ரஜன், ஆக்ஸிஜனை இணைப்பதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் எரிபொருள் செல்கள் இந்த ஹைட்ரஜன் இரயில்களில் பொருத்தப்பட்டுள்ளன.