TNPSC Thervupettagam

ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் இரயில்

June 28 , 2023 391 days 218 0
  • ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இந்தியாவின் முதல் இரயிலின் முன் மாதிரி என்பது 2023-2024 ஆம் நிதியாண்டில் வடக்கு இரயில்வே நிர்வாகத்தின் ஜிந்த்-சோனிபட் பகுதிகளுக்கு இடையே தொடங்கப் படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் உற்பத்தி ஆலையானது, அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள இரயில் சந்திப்புக்கு அருகில் அமைக்கப்பட்டு வருகிறது.
  • தற்போது ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இரயில்கள் அனைத்தும் ஜெர்மனியில் மட்டும் இயக்கப் படுகின்றன.
  • ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இரயில்கள் டீசல் என்ஜின்களுக்குப் பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் கலன்களைப் பயன்படுத்துகின்றன.
  • இந்த மின்கலங்கள் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றினை ஒன்றிணைத்து அதன் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்து இரயில் என்ஜினின் இயக்கிகளை இயக்க பயன்படுத்துகிறது.
  • இந்தச் செயல்முறையில் தண்ணீர் என்பது ஒரு வினை விளைப் பொருளாக கிடைக்கப் பெறுவதோடு இதில் சிறிதளவு வெப்பமும் வெளியிடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்