"புத்தாக்கத் திட்டம்" என்ற தூய ஹைட்ரஜன் திட்டத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது, 2030 ஆம் ஆண்டிற்குள் குறைந்தது 3 ஹைட்ரஜன் பள்ளத்தாக்குகளைக் கண்டறிந்து நிறுவும் செயல்முறையை அமைத்துள்ளது.
"ஹைட்ரஜன் பள்ளத்தாக்கு" என்பது ஒரு புவியியல் பகுதியாக - ஒரு நகரம், ஒரு பகுதி, ஒரு தீவு அல்லது ஒரு தொழில்துறை தொகுதி - அதில் கணிசமான அளவு ஹைட்ரஜனைப் பயன்படுத்துகின்ற பல ஹைட்ரஜன் பயன்பாடுகள் ஒரு ஒருங்கிணைந்த ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பாக, பொருளாதாரத்தை மேம்படுத்துகிற வகையில் இந்தத் திட்டமானது ஒன்றிணைக்கப் படுகின்றது..
புத்தாக்கத் திட்டம் (MI) என்பது 23 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஆணையம் (ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பாக) ஆகியவை இணைந்து, தூய எரிசக்தியை மலிவு விலையில், ஈர்ப்பு மிக்க மற்றும் அணுகக் கூடியதாக மாற்றுவதற்கான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் செயல் விளக்க முறைகள் ஆகியவற்றின் மீதான முதலீட்டை ஊக்குவிக்கச் செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ள ஒரு பத்தாண்டு கால நடவடிக்கையாகும்.
இது பாரீஸ் ஒப்பந்த இலக்குகள் மற்றும் நிகர சுழிய உமிழ்வு நிலை ஆகியவற்றிற்கான பாதைகளை நோக்கிய முன்னேற்றத்தை துரிதப்படுத்தும்.