TNPSC Thervupettagam

ஹைட்ரஜன் வெடிகுண்டு - சீனா

April 25 , 2025 13 hrs 0 min 22 0
  • சீன அறிவியலாளர்கள் அணுசக்தி சாராத வெடி குண்டினை உருவாக்கியுள்ளனர்.
  • இது இரண்டு வினாடிகளுக்கு மேல் நீடிக்கும் வெள்ளை நிறச் சூடான தீப்பிழம்பினை உருவாக்குகின்ற ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்டது.
  • இரண்டு கிலோ குண்டினால் உருவாக்கப்படும் தீப்பிழம்பு நீடிக்கும் கால அளவு ஆனது அதற்குச் சமமான TNT வெடிகுண்டுகளை விட 15 மடங்கு அதிகமாகும்.
  • இது வழக்கமான அழுத்தப்பட்ட கலன்களை விட மிக கணிசமாக அதிக அடர்த்தியில் ஹைட்ரஜனை சேமிக்கக் கூடிய ஒரு முக்கிய கூறான மெக்னீசியம் ஹைட்ரைடைப் பயன்படுத்துகிறது.
  • ஒரு நிலையான வெடிபொருளால் நன்கு வெடிக்கத் தூண்டப்படும் போது, ​​மெக்னீசியம் ஹைட்ரைடு விரைவான வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு, ஹைட்ரஜன் வாயுவை அது வெளியிடுகிறது.
  • இந்த வாயு காற்றில் கலந்தவுடன் பற்றி எரிந்து, சுமார் 1,000°Cக்கும் அதிகமான வெப்ப நிலையை எட்டக்கூடிய ஒரு தீப்பிழம்பினை உருவாக்குகிறது என்பதோடு  இது TNT வெடி குண்டுகளால் உற்பத்தி செய்யப்படும் வெப்பநிலையை விட மிக அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்