March 24 , 2020
1710 days
577
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது கோவிட்-19 வைரஸ் பாதிப்பை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு தேசியப் பணிக் குழுவை அமைத்துள்ளது.
- இந்தப் பணிக் குழுவானது கொரானா வைரஸிற்குச் சிகிச்சையளிப்பதற்காக ஹைட்ராக்ஸி குளோரோ குயின் என்ற மருந்தைப் பயன்படுத்துமாறு பரிந்துரைத்துள்ளது.
- இந்த மருந்தானது பெரும்பாலும் மலேரியா நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்றது.
- தென் கொரியா மற்றும் இத்தாலி ஆகிய இரு நாடுகளும் கோவிட் – 19ன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த மருந்தைப் பயன்படுத்துகின்றன.
- இந்த நோயின் ஆரம்ப நிலையிலேயே இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு இந்த மருந்து சிறப்பாகச் செயல்படுகின்றது என்பதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது.
Post Views:
577