TNPSC Thervupettagam

ஹைட்ரோகார்பன் அகழ்வு ஆய்விற்கான ஏலக்குத்தகை ஒப்பந்தம் – தமிழ்நாடு

March 2 , 2025 8 hrs 0 min 47 0
  • தென் தமிழகத்தின் மன்னார் வளைகுடாவின் ஆழ்கடல் பகுதியில் 9,990.96 சதுர கி.மீ பரப்பளவு ஆனது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கான மிகச் சமீபத்திய ஒரு ஏலக்குத்தகை ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
  • நிறுவனங்கள் அதன் எண்ணெய் அகழகெடுப்பு ஆய்வு உரிமைகளுக்கான ஏலங்களை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கின்ற வகையில் சுதந்திரமாக உற்பத்தித் தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து உரிமம் பெறுதல் திட்டத்தின் 10வது சுற்று ஏலத்தின் ஒரு பகுதியாகும்.
  • இந்த ஏலக் குத்தகை ஒப்பந்தமானது, மொத்தம் 1,91,986 சதுர கி.மீ பரப்பிலான கடல் பரப்பைக் கொண்டுள்ள நாடு முழுவதும் உள்ள 25 கடல் பகுதிகளை உள்ளடக்கியது.
  • ஹைட்ரோகார்பன் அகழகெடுப்பு ஆய்வு மற்றும் உரிமக் கொள்கையின் கீழ் ஒரே ஏலச் சுற்றில் ஏக்கர் அளவிலான மிகப்பெரிய அளவு நிலப்பரப்பு வழங்கப்படுவதை இது குறிக்கிறது.
  • மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் ஆனது, கடல் பசு, ஆமைகள் மற்றும் கடல் சார் பாலூட்டிகள் போன்ற அரிய மற்றும் அழிந்து வரும் உயிரினங்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்